கடற்படை மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் கேரளா கஞ்சா மற்றும் ஹெராயின் ஆகியவற்றுடன் மூன்று பேர் (03) கைது செய்யப்பட்டனர்

கடற்படை காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து 2020 ஏப்ரல் 2 ஆம் திகதி, முள்ளிக்குளம் பகுதியில் மற்றும் புத்தலம், கரம்ப பகுதியில் மேற்கொண்டுள்ள இரண்டு நடவடிக்கைகளின் போது கேரளா கஞ்சா மற்றும் ஹெராயினுடன் மூன்று (03) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் பேரழிவு நிலைமை நிலவிய போதிலும் கடற்படை தீவில் இருந்து போதைப்பொருளை அழிக்கும் தேசிய முயற்சியில் பங்களிப்பு செய்து வருகிறது, மேலும் கடலிலும் நிலத்திலும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க பல போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தியுள்ளது. அதன்படி, சிலாவத்துர பொலிஸாருடன் ஒருங்கிணைந்து வடமேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று சோதனை செய்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடமிருந்து 01.9 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில், நொரொச்சோலை பொலிஸாருடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியில் சென்ற ஒரு நபரின் வசமிருந்து சுமார் 250 மி.கி ஹெராயின் மீட்கப்பட்டது. அதன்படி, இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக, மூன்று சந்தேகநபர்கள், கேரள கஞ்சா, ஹெராயின், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி ஆகியவை கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 46 வயதுக்குட்பட்ட மரிச்சிக்கட்டி மற்றும் பாலவி பகுதிகளில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன. கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள், கேரள கஞ்சா, ஹெராயின், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகிய மீது மேலதிக விசாரணைகள் சிலாவத்துர மற்றும் நொரொச்சோலை காவல் நிலையங்களால் நடத்தப்படுகின்றன.