கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் பல வைத்தியசாலைகளுக்கு கிருமிநாசினி அறைகள் வழங்கப்பட்டன.

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட கிருமிநாசினி அறைகள் 2020 ஏப்ரல் 02 ஆம் திகதி கலுபோவில போதனா வைத்தியசாலை, நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை ஆகியவற்றில் நிருவப்பட்டன.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையால் மேற்கொள்ளபட்டுகின்ற கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு உருவாக்கிய கிருமிநாசினி அறைகள் கலுபோவில போதனா வைத்தியசாலை, நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலை ஆகியவற்றில் 2020 ஏப்ரல் 02 ஆம் திகதி நிருவப்பட்டன. இந்த வைத்தியசாலைகளுக்கு ஏராளமான மக்கள் தினசரி வருகின்றதுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற மக்களின் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வைத்தியசாலை வளாகத்தில் குறித்த கிருமிநாசினி அறைகள் நிருவப்பட்டன.

மேலும், கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் இந்த வகையான கிருமிநாசினி அறைகளை உற்பத்தி செய்ய கடற்படை தொடங்கியுள்ளது. அதன்படி, தற்போது வரை 09 கிருமிநாசினி அறைகளை தயாரிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தயாரித்த அறைகளில் ஒன்று சமீபத்தில் கடற்படை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிருவப்பட்டது.