கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் மற்றொரு சமூக சேவை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ‘மிதுரு மிதுரோ’ மறுவாழ்வு மையத்தின் நபர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கும் ஒரு திட்டத்தை இன்று (2020 ஏப்ரல் 04,) இலங்கை கடற்படை தனது சமூக நலத் திட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி மேற்பார்வையால் மேற்கொள்ளபடுகின்ற கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ், இன்று (2020 ஏப்ரல் 04) ‘மிதுரு மிதுரோ’ மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் பயன்படுத்தல் காரணமாக மறுவாழ்வு பெறும் 338 நபர்களுக்கு 10 நாட்களுக்கு போதுமான உலர் உணவு பொதிகளை வழங்கப்பட்டது. குறித்த திட்டத்திக்கு பல சிவில் அமைப்புகளும் நிதியுதவி அளித்ததுடன் கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி, பணிப்பாளர் நாயகம் சேவைகள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் ஏற்படுகின்ற எந்தவொரு பேரழிவையும் எதிர்கொண்டு கடற்படை தனது கடமையைச் செய்து வருகின்றதுடன் எதிர்காலத்திலும் கடற்படை தனது சமூக பொறுப்புணர்வு திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்.