நிகழ்வு-செய்தி

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி மற்றும் 07 ஆம் திகதி, ஊர்காவற்துறை பகுதியில் மற்றும் கொழும்பு, ஓய்வூதியத் துறை ஆகிய இடங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

07 Apr 2020

பொல்கொட மற்றும் பெந்தர ஆற்றில் ரோந்துப் பணிகளை கடற்படை பலப்படுத்தியது

பண்டாரகம அடலுகம பகுதியில் மற்றும் தர்கா டவுன் ஆகிய இடங்களிலிருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கண்டுபிடித்த பின்னர் அப் பகுதி மக்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி அப்பகுதியிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொல்கொட மற்றும் பெந்தர நதிகளைப் பயன்படுத்தி இப்பகுதியில் உள்ளவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு பயணிப்பது தடுக்க 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி முதல் கடற்படை பொல்கொட மற்றும் பெந்தர நதிகளில் இவ்வாரு ரோந்து பணிகளை தொடங்கியது.

07 Apr 2020

வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வெலிஸர, எலபிட்டிவல மக்களுக்காக கடற்படை மேற்கொண்டுள்ள பொழுதுபோக்கு திட்டம்

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அரசாங்கத்தால் பெயரிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படை 2020 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் கொழும்பு பகுதியில் உள்ள மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக இசை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

07 Apr 2020

கடற்படை மருத்துவமனைகளில் நீண்டகால சிகிச்சை பெறும் நோயாளிகளின் மாதாந்திர மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு வழங்கும் திட்டமொன்று கடற்படை செயல்படுத்தி வருகிறது.

ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாட்டில் உள்ள தற்போதைய சூழ்நிலையின் கீழ் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு காலி மற்றும் மாதர மாவட்டங்களில் வீடற்றவர்களுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டமொன்று 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி மேற்கொள்ளபட்டது.

07 Apr 2020

இலங்கை கடற்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தால் 13 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன

இலங்கை கடற்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தால் காலி முகத்திடல் கடற்கரையில் பாதுகாக்கப்பட்ட கடலாமை முட்டைகளிலிருந்து வெளிவந்த 13 கடலாமை குட்டிகள் இன்று (2020 ஏப்ரல் 06) கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

07 Apr 2020