கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து 2020 ஏப்ரல் 07 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சிப்பிக்குளம பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 36 கிராம் மற்றும் 93 மில்லிகிராம் கேரளா கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாட்டில் நிலவும் பேரழிவு நிலைமையை எதிர்கொண்டு அதை ஒழுங்குபடுத்துவதற்கான அனைத்து ஆதரவையும் வழங்குகின்ற கடற்படை நாட்டைப் பாதுகாப்பதில் தனது நடவடிக்கைகளைத் தொடர்கிறது. அதன்படி 2020 ஏப்ரல் 07 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் குழு, அம்பலாண்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழு உடன் இணைந்து, ஹம்பாந்தோட்டை சிப்பிகுளம் பகுதியை மையமாகக் கொண்டு ஒரு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அங்கு ஊரடங்கு சட்டத்தை மீறி சாலையில் பயணித்த சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று அவதானித்த கடற்படையினர் முச்சக்கர வண்டியை சோதனை செய்த போது விற்பனைக்காக ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 கிராம் மற்றும் 93 மில்லிகிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த கேரள கஞ்சா, முச்சக்கர வண்டி மற்றும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட கேரள கஞ்சா, முச்சக்கர வண்டி மற்றும் சந்தேகநபர் ஆகியோர் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.