கற்பிட்டி ‘ருவல’ சொகுசு விடுமுறை விடுதி தனிமைப்படுத்தப்பட்ட மையமாக பயன்படுத்த கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது

கற்பிட்டி பகுதியில் உள்ள ‘சீலைன் ஹோல்டிங்ஸ்’ தனியார் நிறுவனத்திற்கு (Ceyline Holdings Pvt Ltd) சொந்தமான 41 அறைகள் கொண்ட ‘ருவல’ சொகுசு விடுமுறை விடுதி கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுபடுத்த கடற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் போது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையமாக பயண்படுத்த தற்காலிகமாக 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால், நாட்டின் சுற்றுலா மற்றும் தொடர்புடைய சேவைகள் முற்றிலும் குறைந்துவிட்டன. இத்தகைய சூழ்நிலைகளில், புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்துவதுக்காக கடற்படை மேற்கொள்ளும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உதவ ‘சீலைன் ஹோல்டிங்ஸ்’ தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு முடிவு செய்துள்ளனர். அதன் படி 41 அறைகள் கொண்ட ‘ருவல’ சொகுசு விடுமுறை விடுதி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையமாக பராமரிக்க தற்காலிகமாக கடற்படைக்கு ஒப்படைக்கும் சந்தர்ப்பம் இன்று (2020 ஏப்ரல் 08) கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உட்பட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள், சீலைன் ஹோல்டிங்ஸ்’ தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர், கேப்டன் (வணிகக் கப்பல்கள்) அஜித் பீரிஸ் மற்றும் சீலைன் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.

மேலும், நாட்டில் நிலவும் நிலைமை இயல்பு நிலைக்கு வந்தவுடன், சர்வதேச தரத்தின்படி கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், மீண்டும் செயல்பாடுகள் தொடங்க இந்த சொகுசு விடுமுறை விடுதி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சுற்றுலாத் துறையில் நன்கு அறியப்பட்ட அமைப்பான சீலைன் ஹோல்டிங்ஸ்’ தனியார் நிறுவனம் இந்த சவாலான காலத்தில் நாட்டிற்காக எடுத்த இந்த விவேகமான முடிவுக்கு கடற்படைத் தளபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.