தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட படகுக்கு கடற்படை உதவி

2020 ஏப்ரல் 07 ஆம் திகதி, தெற்கு கடல்வழியாக பயணம் செய்யும் போது கப்பலின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலி கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்ட ஒரு வெளிநாட்டு படகில் துன்பப்பட்ட தம்பதியினருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க கடற்படை 2020 ஏப்ரல் 07 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இலங்கையில் ஊரடங்குச் சட்டம் வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலி கடலில் நங்கூரமிடப்பட்ட ஒரு படகில் துன்பப்பட்ட வெளிநாட்டு தம்பதியின் வேண்டுகோளுக்கு பதிலளித்த கடற்படை அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் 2020 ஏப்ரல் 07 ஆம் திகதி வழங்கியது. நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக தங்களது உணவு மற்றும் குடிநீரை அணுக முடியாத இந்த தம்பதியினர் இதை குறித்து கடற்படைக்கு தகவல் தெரிவித்தினர். அதன் பின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் தெற்கு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போலின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி இந்த வெளிநாட்டு கப்பலுக்கு உணவு மற்றும் குடிநீரை வழங்க கடலோர காவல் படகொன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் துன்பப்பட்ட இந்த தம்பதியினருக்கு வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பாக தம்பதியினர் கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர்.