காக்கத்தீவு கடல் பகுதியிலிருந்து பல கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது

இலங்கை கடற்படை இன்று (2020 ஏப்ரல் 08) மன்னார் காக்கத்தீவு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப்பணியின் போது 01 கிலோகிராம் மற்றும் 400 கிராம் ஈரமான கஞ்சாவை பறிமுதல் செய்தது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகின்றதுடன் தீவைச் சுற்றியுள்ள கடலிலும் பாதுகாப்பை வழங்குவதற்கான பொறுப்பை நிறைவேற்றி வருகிறது. அதன்படி, இன்று (2020 ஏப்ரல் 08) வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பார்சலொன்று கடலில் மிதப்பதைக் கண்கானித்தனர். குறித்த பார்சலை மெலும் சோதித்த போது சுமார் 1 கிலோகிராம் மற்றும் 400 கிராம் ஈரமான கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ச்சியான கடற்படை ரோந்துகள் காரணமாக கடல் வழியாக கடத்தப்பட்டிருக்கக்கூடிய இந்த கேரள கஞ்சா கடலுக்கு கொட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட குறித்த கேரள கஞ்சாவை மேலதிக விசாரனைகளுக்காக ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.