புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தொலை கட்டுப்பாட்டால் செயல்படுகின்ற மெடிமேட்(Medimate) என்ற தானியங்கி சாதனயொன்று கடற்படை உருவாக்கியது

ஒரு கண்டுபிடிப்பாளரான துஷார கெலும் வடசிங்க அவர்களின் அடிப்படை கருத்தை கவணத்தில் எடுத்துக்கொண்டு, கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Medimate) பிரிவு, கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பரிசோதிப்பதற்கும் 'மெடி மேட்' என்ற தொலை கட்டுப்பாட்டு சாதனமொன்றை உருவாக்கியது, கடற்படையின் ஆதரவின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த தானியங்கி சாதனம் நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக இன்று (2020 ஏப்ரல் 08,) ஒப்படைக்கப்பட்டது..

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்த்து கடற்படை பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், வருங்கால கண்டுபிடிப்பாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, அவர்களின் புதுமையான கருத்துக்களை வெளிப்படுத்த கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு மூலம் தேவையான வசதிகளை வழங்கப்படுகிறது. அதன் படி மருத்துவர்கள் நோயாளிகளிடம் செல்லாமல் அவர்களின் அறிகுறிகளைக் கண்டறிய முடிகின்ற தொலை கட்டுப்பாட்டால் செயல்படுகின்ற மெடிமேட் (Medimate) என்ற தானியங்கி சாதனயொன்று உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இந்த சாதனம் மூலம் நோயாளிகளிடம் செல்லாமல் மருத்துவர்கள் அவகளுடைய அறிகுறிகளைக் கண்டறிய முடிகின்றதுடன் நோயாளிகளுடன் பேசவும், நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கவும், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. மேலும், இது பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இருந்து மருத்துவ ஊழியர்களுக்கு மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்களுக்கு வைரஸ் தொற்றும் அபாயத்தைக் குறைக்கும். பயனரின் கைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதை கிருமி நீக்கம் செய்வதற்கான தானியங்கி கை கிருமிநாசினியையும் இந்த இயந்திரம் கொண்டுள்ளது.

அனைத்து வசதிகளும் கொண்ட இந்த சாதனம் கொரோனா வைரஸ் தொற்று நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற மக்களுக்கு சிகிச்சையளிக்கும் நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக இன்று (2020 ஏப்ரல் 08,) ஒப்படைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்காக இயக்குனர் கடற்படை மின் மற்றும் மின்னணு (துரித தாக்குதல் மற்றும் பலசக்தி), இயக்குநர் கடற்படை மின் மற்றும் மின்னணு பொறியியல் (நிர்வாகம் மற்றும் ஆயுதங்கள்), (நிர்வாகம் மற்றும் பயன்பாடுகள்) கமடோர் (மின்) கமல் போம்புகலகே கழந்துகொண்டனர். இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு சமீபத்தில் ஒரு கிருமிநாசினி அறையை உருவாக்கியுள்ளதுடன், அது கூடுதலான அம்சங்களுடன் தற்போது கலுபோவில போதனா மருத்துவமனை, நெவில் பெர்னாண்டோ போதனா மருத்துவமனை மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளன.