நிகழ்வு-செய்தி

கடற்படை மருத்துவமனைகளில் விசேட வைத்திய சிகிச்சைகள் நிறுத்தப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

கோவிட் 19 வைரஸின் பரவல் காரணத்தினால் இலங்கை கடற்படையின் விசேட வைத்திய சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, அதற்கு மாற்றாக, அத்தியாவசிய மருத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு மருத்துவர்களின் ஒருங்கிணைப்புடன் ஒரு சிறப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

08 Apr 2020

கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் நீண்டகால சிகிச்சை பெறும் நோயாளிகளின் மாதாந்திர மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு வழங்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது

கொழும்பு கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாட்டில் உள்ள தற்போதைய சூழ்நிலையின் கீழ் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இவர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டமொன்று இன்று 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி செயல்படுத்தப்பட்டது.

08 Apr 2020

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தொலை கட்டுப்பாட்டால் செயல்படுகின்ற மெடிமேட்(Medimate) என்ற தானியங்கி சாதனயொன்று கடற்படை உருவாக்கியது

ஒரு கண்டுபிடிப்பாளரான துஷார கெலும் வடசிங்க அவர்களின் அடிப்படை கருத்தை கவணத்தில் எடுத்துக்கொண்டு, கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Medimate) பிரிவு, கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பரிசோதிப்பதற்கும் 'மெடி மேட்' என்ற தொலை கட்டுப்பாட்டு சாதனமொன்றை உருவாக்கியது,

08 Apr 2020

காக்கத்தீவு கடல் பகுதியிலிருந்து பல கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது

இலங்கை கடற்படை இன்று (2020 ஏப்ரல் 08) மன்னார் காக்கத்தீவு கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப்பணியின் போது 01 கிலோகிராம் மற்றும் 400 கிராம் ஈரமான கஞ்சாவை பறிமுதல் செய்தது.

08 Apr 2020

தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட படகுக்கு கடற்படை உதவி

2020 ஏப்ரல் 07 ஆம் திகதி, தெற்கு கடல்வழியாக பயணம் செய்யும் போது கப்பலின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலி கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்ட ஒரு வெளிநாட்டு படகில் துன்பப்பட்ட தம்பதியினருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க கடற்படை 2020 ஏப்ரல் 07 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது.

08 Apr 2020

கற்பிட்டி ‘ருவல’ சொகுசு விடுமுறை விடுதி தனிமைப்படுத்தப்பட்ட மையமாக பயன்படுத்த கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது

கற்பிட்டி பகுதியில் உள்ள ‘சீலைன் ஹோல்டிங்ஸ்’ தனியார் நிறுவனத்திற்கு (Ceyline Holdings Pvt Ltd) சொந்தமான 41 அறைகள் கொண்ட ‘ருவல’ சொகுசு விடுமுறை விடுதி கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுபடுத்த கடற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் போது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையமாக பயண்படுத்த தற்காலிகமாக 2020 ஏப்ரல் 08 ஆம் திகதி கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

08 Apr 2020

கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து 2020 ஏப்ரல் 07 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சிப்பிக்குளம பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 36 கிராம் மற்றும் 93 மில்லிகிராம் கேரளா கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

08 Apr 2020