வெளிநாட்டு வணிகக் கப்பலில் இருந்த நோய்வாய்ப்பட்ட நபரை கடற்படையினரால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழத்து வரப்பட்டது

வெளிநாட்டு வணிகக் கப்பலான Maersk Avon கப்பலில் நோய்வாய்ப்பட்ட ஒருவரை கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழத்து வர 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான Maersk Avon எனக் கப்பலில் பணியாற்றிய ஒருவர் வயிற்று வலியால் நோய்வாய்ப்பட்டுள்ளார். கப்பலில் இருந்த அவரை அவசர சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து வருமாரு இந்த கப்பலுக்கு சேவைகளை வழங்குகின்ற கப்பலின் உள்ளூர் முகவரான Feeder Agencies Lanka (Private) Limited நிருவனம் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு அலுவலகத்திற்கு (ISPS) கோரிக்கை விடுத்தது. அதன்படி, 38 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்த மந்திகர் நாமீத் சித்தப்பா கடற்படையினரால் 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (சிபிஆர்என்) பிரிவு கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 05 கடல் மைல் தொலைவில் உள்ள கப்பலை அணுகி, சுகாதார நிபுணர்களால் அறிவிக்கப்பட்ட தேவையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நோய்வாய்ப்பட்ட நபரை கரைக்கு கொண்டு வந்தது. இதனையடுத்து, ‘சுவாசரிய’ ஆம்புலன்ஸ் சேவையால் நோயாளியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவர் துறைமுக வளாகத்திலேயே கிருமி நீக்கம் செய்யப்பட்டார். இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் ‘சுவாசரிய’ ஆம்புலன்ஸ் சேவையும் இந்த பொறுப்பான பணியைச் செய்வதற்கு கடற்படைக்கு தங்களது உறுதியற்ற ஆதரவை வழங்கின.