நிகழ்வு-செய்தி

கிங்தொட்டை பகுதியில் கைப்பற்றப்பட்ட முதலை கடற்படை வனவிலங்குத் துறையிடம் ஒப்படைத்தது.

காலி கிங்தொட்டை பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன் கடற்படை ஒரு முதலை கவனமாகப் பிடித்து இன்று (2020 ஏப்ரல் 12,) வனவிலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்தது.

12 Apr 2020

ராகமை மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளின் இருபத்தேழு (27) சுகாதார ஊழியர்கள் மன்னார், முலங்காவில் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனர்

ஜா-எல சுதுவெல்ல பகுதியிலிருந்து கண்டுபிடித்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ராகமை வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் ஒரு சுகாதார ஊழியரும் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என கண்டறியப்பட்டதுடன் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் இருபத்தி இரண்டு (22) சுகாதார ஊழியர்களும், வெலிசறை சுவாச நோய்க்கான வைத்தியசாலையின் 05 சுகாதார பணியாளர்களும் இன்று (2020 ஏப்ரல் 12) மன்னார் முலங்காவில் பகுதியில்உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

12 Apr 2020

கடற்படை பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் கிருமி நீக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட மேலும் ஒரு கிருமி நீக்கும் திட்டம் இன்று (2020 ஏப்ரல் 12) பெல்லன்வில ரஜமஹா விஹாரையில் இடம்பெற்றது.

12 Apr 2020

ஜா-எல சுதுவெல்ல பகுதியிலிருந்து கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிய 28 நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மேலும் 52 பேர் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டன

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 28 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் 2020 ஏப்ரல் 09 ஆம் திகதி கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு முறையான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்காக ஒலுவில் உள்ள இலங்கை கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

12 Apr 2020

கடற்படை தயாரித்த இரண்டாவது மெடி மேட் (Medi mate) இயந்திரம் கலுபோவில போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டன

இலங்கை கடற்படையால் தயாரிக்கப்பட்ட மற்றொரு மெடி மேட் (Medi mate) தொலை கட்டுப்பாட்டு தானியங்கி சாதனம் இன்று (2020 ஏப்ரல் 12,) கலுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

12 Apr 2020

தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் இரண்டு இசை நிகழ்ச்சிகள் 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி கெத்தாராமை மற்றும் கிராண்ட் பாஸ் பகுதிகளில் உள்ள மாடி வீடுகள் மையமாகக் கொண்டு இடம்பெற்றது.

12 Apr 2020

சதுப்புநில தாவரங்கள் வெட்டிய ஆறு நபர்கள் (06) கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 11 ஆம் திகதி மன்னார் முந்தலம்பிட்டி பகுதியில் கடற்படை மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது சதுப்புநில தாவரங்கள் வெட்டிய 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

12 Apr 2020

வெளிநாட்டு வணிகக் கப்பலில் இருந்த நோய்வாய்ப்பட்ட நபரை கடற்படையினரால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழத்து வரப்பட்டது

வெளிநாட்டு வணிகக் கப்பலான Maersk Avon கப்பலில் நோய்வாய்ப்பட்ட ஒருவரை கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழத்து வர 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

12 Apr 2020

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை றாகம வடக்கு கொழும்பு போதனா மருத்துவமனை, மினுவங்கொடை அடிப்படை மருத்துவமனை, புத்தளம் சஹிரா முஸ்லிம் கல்லூரி மற்றும் மருதானை, கொள்ளுப்பிட்டி பகுதிகளில் உள்ள வங்கி வளாகங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

12 Apr 2020