ராகமை மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளின் இருபத்தேழு (27) சுகாதார ஊழியர்கள் மன்னார், முலங்காவில் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனர்

ஜா-எல சுதுவெல்ல பகுதியிலிருந்து கண்டுபிடித்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ராகமை வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் ஒரு சுகாதார ஊழியரும் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என கண்டறியப்பட்டதுடன் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் இருபத்தி இரண்டு (22) சுகாதார ஊழியர்களும், வெலிசறை சுவாச நோய்க்கான வைத்தியசாலையின் 05 சுகாதார பணியாளர்களும் இன்று (2020 ஏப்ரல் 12) மன்னார் முலங்காவில் பகுதியில்உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 28 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் 2020 ஏப்ரல் 09 ஆம் திகதி கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு முறையான தனிமைப்படுத்தல் செயல்முறைக்காக அனுப்பப்பட்டதுடன் அங்கு 28 பேரில் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என கண்டறியப்பட்டது.

ராகமை கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களின் ஒருவர் சுடுவெல்லவைச் சேர்ந்த COVID-19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதற்காக குழுவின் இணைப்பு தொடர்பான அடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணையின் விளைவாக, ராகமை வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும் வெலிசறை சுவாச நோய்க்கான வைத்தியசாலையின் 5 சுகாதார ஊழியர்களும் அடையாளம் காணப்பட்டனர். இந்த குழுவில் 22 ஆண்கள் மற்றும் 05 பெண்கள் உள்ளனர்.

நிலவும் சூழ்நிலை காரணமாக, மருத்துவமனை சுகாதார ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த 27 நபர்களும் ஆரம்ப சுகாதார பரிசோதனைக்குப் பிறகு மன்னார், முலங்காவில் பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு இன்று (2020 ஏப்ரல் 20,) அனுப்பப்பட்டது.