பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை கருத்தில் கொண்டு, 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பால் பொங்க வைக்கும் விழா மற்றும் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை மகிழ்விக்க ஒரு இசை மாலை ஏற்பாடு செய்யபட்டது.

நாட்டின் அனைத்து மக்களுக்காக தங்களது அன்பானவர்களிடமிருந்து விலகி பூஸ்ஸ கடற்படை தளத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தில் வெற்றிகரமாக தனிமைப்படுத்தலில் ஈடுபடுகின்ற நபர்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை எளிமையாகக் கொண்டாட கடற்படை 2020 ஏப்ரல் 14 அம் திகதி பல ஏற்பாடுகள் செய்துள்ளதுடன் இவர்கள் பால் பொங்க வைக்கும் விழாவில் மற்றும் இசை மாலை போன்ற நிகழ்வுகளில் இணைந்தனர். குறித்த மையத்தில் நடத்தப்பட்ட இந்த திட்டத்திற்காக தெற்கு கடற்படை கட்டளையின் துணை தளபதி, உட்பட அதிகாரிகள், மையத்தின் பொறுப்பான கடற்படை மருத்துவ ஊழியர்கள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர். தங்களது உற்சாகத்தை உயர்த்த இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததற்காக தனிமைப்படுத்தலில் ஈடுபடுகின்ற நபர்கள் கடற்படைக்கு நன்றி தெரிவித்தனர்.

பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தங்களுடைய தனிமைப்படுத்தலின் பின்னர் இன்றுவரை 57 நபர்கள் தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டுள்ளனர். மேலும், தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து விடுவிப்பதற்கு முன்னர் அவர்களுக்கு முறையான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளின் படி சிறந்த சேவையை வழங்க கடற்படை உறுதியாக உள்ளது.