பானம பகுதிச் சேந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்ல மற்றும் விநியோகிக்க கடற்படை உதவி

2020 ஏப்ரல் 14 ஆம் திகதி பானம பகுதிச் சேந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல மற்றும் விநியோகிக்க இலங்கை கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது.

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே வழங்குவதற்கான புதிய வழிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதன் படி பொத்துவில் இதர சேவை கூட்டுறவு சங்கம் மூலம் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி பானம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இதுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் கீழ் மற்றும் தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவின் வழிகாட்டுதலின் கீழ், இக் கட்டளையின் கடற்படையினரால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்ல மற்றும் விநியோகிக்க உதவி வழங்கப்பட்டது.

மேலும், ஊரடங்கு சட்டம் எதிர்கொண்டு, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத மக்களுக்கு உதவ கடற்படை தொடர்ந்து இது போன்ற சமூக நலத் திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது.