கடற்படை வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் மாதாந்திர மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு வழங்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டது

கடற்படை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நாட்டில் உள்ள தற்போதைய சூழ்நிலையின் கீழ் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இவர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டமொன்று 2020 ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மையமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களின் கீழ் வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நீண்ட காலமாக சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு மருந்துகளை விநியோகிக்கப்பட்டது. மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கடைசி மருந்துகளை இவ்வாரு விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டதுடன் வடமேற்கு மாகாணத்தில் வென்னப்புவ, நாத்தண்டிய, சிலாபம், தங்கொட்டுவ, குலியாபிட்டி, மாவதகம, பொத்துஹெர, போயகனே மற்றும் சாலியவெவ ஆகிய பகுதிகளும் வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரம், கஹடகஸ்திகிலிய, கலென்பிந்துநுவெவ மற்றும் பண்டொரமடுவ ஆகிய பகுதிகளும் மையமாக கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விநியோகம் கடற்படை மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்திலும் இதே போன்ற திட்டங்களை செயலபடுத்த கடற்படை தயாராக உள்ளது.