கஞ்சா கொண்ட ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஏப்ரல் 18 ஆம் திகதி தங்காலை பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது கடற்படை ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்களைக் கஞ்சாவுடன் கைது செய்தது.

நாட்டில் பேரழிவு நிலைமை நிலவிய போதிலும், போதைப்பொருள் கடத்தலை ஒடுக்கும் தேசிய பணியில் இலங்கை கடற்படை செயல்பட்டு வருகிறது. அதன் படி தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், 2020 ஏப்ரல் 18 ஆம் திகதி தங்காலை தம்மரத்ன மாவதாவில் பயணித்த இரண்டு சந்தேக நபர்களை சோதனை செய்த போது அவர்களிடமிருந்து 48 கிராம் கஞ்சா கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், போதைப்பொருள் விற்பனை செய்யும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட பெண் அப்பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவராகவும், மற்ற இருவர் (02) தங்காலை, மாரகொல்லிய பகுதியில் வசிப்பவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்களும் கஞ்சாவுடன் தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.