கடற்படை நிர்மானித்த மற்றொரு கிருமிநாசினி அறை தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை 2020 ஏப்ரல் 19 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டது.

கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட இந்த வகையான கிருமிநாசினி அறைகள் நாடு முழுவதும் பல மருத்துவமனைகளில் மற்றும் பொது இடங்களில் நிருவப்பட்டுள்ளதுடன் இவ்வாரு நிர்மானிக்கப்பட்ட மேலும் ஒரு கிருமிநாசினி அறை தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் சிவில் பொறியியல் பிரிவின் கடற்படையினரால் 2020 ஏப்ரல் 19 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் நிறுவப்பட்டது.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, கடற்படை வீரர்கள் சிறப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக முகாம்களுக்கு வெளியே தங்களுடைய கடமைகலில் ஈடுபடுகின்றனர். மேலும், இந்த சோதனை நேரத்தில் கடற்படையின் ஆரோக்கியமான மனித வளத்தை பராமரிக்க முகாமில் ஒரு ஆரோக்கியமான சூழலை பராமரிப்பது கட்டாயமாக இருப்பதால் அவர்கள் வெளியே பணிகள் முடித்து முகாமுக்குள் திரும்பி வருகின்ற போது கிருமி நீக்கம் செய்யப்படுவது அவசியமானது.