கடற்படை காவல்துறையினருடன் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா மற்றும் ஹெரொயின் கொண்ட நாங்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்

தலைமன்னார் இறங்குதுறையில் 2020 ஏப்ரல் 19 அன்று கடற்படை காவல்துறையினருடன் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடலின் போது கேரள கஞ்சா மற்றும் ஹெரொயின் கொண்ட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி,வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் தலைமன்னார் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் இறங்குதுறையில் நிறுத்திருந்த சந்தேகத்திற்கிடமான படகொன்று சோதனை செய்யப்பட்டது. குறித்த படகிலிருந்து 10 கிராம் மற்றும் 800 மிலி கிராம் கேரள கஞ்சா மற்றும் 15 மிலி கிராம் ஹெரொயின் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி, படகு மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 04 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21 முதல் 27 வயதுக்குட்பட்ட தலைமன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், போதைப் பொருள், டிங்கி படகு மற்றும் வெளிப்புற எரிப்பு இயந்திரம் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.