கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஒரு நபர் (01) தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டார்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பு கொண்டிருந்த ஜா-எல பகுதியில் வசிக்கும் ஒரு நபர் 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்ப கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கொழும்புப் பகுதிச் சேந்தவர்களைத் தேடி கடற்படை புலனாய்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளால் பல நபர்கள் கண்டறியப்பட்டதுடன் கடந்த தினங்களில் அவர்கள் கடற்படையால் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். அதன் படி 2020 ஏப்ரல் 20 திகதி மேற்கொண்டுள்ள இதேபோன்ற நடவடிக்கையின் போது ஜா-எல பகுதியில் சேர்ந்த இந்த நபரை கடற்படையால் கண்டறியப்பட்டது. நிலவும் சூழ்நிலை காரணமாக, இப்பகுதியில் வசிப்பவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இவர் ஆரம்ப சுகாதார பரிசோதனைக்கு பின்னர் ஒலுவில் துறைமுக வளாகத்தில் நிறுவப்பட்ட கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டார்.