சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 06 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, 2020 ஏப்ரல் 20 அன்று தெற்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் பட்டிபொல பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகளுடன் இனைந்து மாதரை குடாவெல்ல மீன்வள துறைமுகத்தில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒருவர் சோதனை செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 70 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கபட்டது. குறித்த கஞ்சாவுடன் அம்பலந்தோட்டை பகுதியில் வசிக்கின்ற 25 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், இலங்கை இராணுவம் மற்றும் யான் ஓய பொலிஸ் சாலைத் தடையில் அதிகாரிகள் இணைந்து யான் ஓய பாலத்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்தனர். அங்கு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த புல்மூட்டை மற்றும் எரக்கண்டி பகுதிகளில் சேர்ந்த 21 முதல் 28 வயதுக்குட்பட்ட மூன்று நபர்களிடமிருந்து 51 கிராம் கஞ்சா மற்றும் 40 க்கும் மேற்பட்ட சட்டவிரோத போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. குச்சவேலி பொலிஸாருடன் இணைந்து சல்பெஆரு பகுதியில் மேற்கொண்டுள்ள மேலும் ஒரு நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த 41 மற்றும் 33 வயதான திருகோணமலை பகுதிச் சேர்ந்த இருவரிடமிருந்து 60 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கபட்டன. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக ஐந்து நபர்கள், போதைப்பொருட்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி கைது செய்யப்பட்டது.

மேலேயுள்ள 03 சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் முறையே தங்காலை, புல்முட்டை மற்றும் குச்சவேலி காவல் நிலையங்களால் நடத்தப்படுகின்றன.

குடாவெல்ல மீன்வள துறைமுகத்தில் 70 கிராம் கஞ்சாவுடன் ஒரு நபர் கைது செய்தல்யான் ஓய பாலம் அருகே உள்ள சாலைத் தடையில் 51 கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் 40 க்கும் மேற்பட்ட சட்டவிரோத போதை மருந்துகள் வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சல்பேயாரு பகுதியில் 60 கிராம் கஞ்சாவுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்