கடற்படை பேலியகொடை மீன் சந்தையில் கிருமி நீக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

கடற்படை இன்று (2020 ஏப்ரல் 21) பேலியகொடை மீன் சந்தையில் அனைத்து இடங்களும் உள்ளடக்கி கிருமி நீக்கும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

கடந்த தினத்தில் பிலியந்தலை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நபர் பயணித்த இடங்கள் கிருமி நீக்கும் செய்யப்படுகின்றன. அதன் படி அவர் பேலியகொடை மீன் சந்தையில் இருந்தாக கிடைத்த தகவல்களின்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ் மேற்கு கடற்படைக் கட்டளையுடன் இணைக்கப்பட்ட வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு மூலம் (2020 ஏப்ரல் 21) இந்த வளாகம் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டன.

இங்கு அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி மீன் சந்தையை கிருமி நீக்கம் செய்ய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.