கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கான சுகாதார ஆடைகள் தொகுப்பு பொது சேவை ஐக்கிய செவிலியர் சங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டது

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான 150 மருத்துவ உடைகளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் பொது சேவை ஐக்கிய செவிலியர் சங்கத்தின் தலைவர் முருத்தெத்துவே ஆனந்த தேரரிடம் இன்று (2020 ஏப்ரல் 21) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகவும் தேவைப்படுகின்ற மருத்துவ ஆடைகளை வழங்கும் திட்டமொன்று இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து கடற்படையால் தொடங்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்த ஆடைகளை தைக்க தேவையான பொருட்கள், இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் கடற்படைக்கு வழங்கப்படுகின்றன. மேலும் கடற்படை தையல் மையங்களில் இந்த மருத்துவ ஆடைகள் தைக்கப்படுகின்றதுடன் முதல் கட்டத்தின் கீழ் தைக்கப்பட்ட 150 மருத்துவ ஆடைகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் பொது சேவை ஐக்கிய செவிலியர் சங்கத்தின் தலைவர் முருத்தெத்துவே ஆனந்த தேரரிடம் இன்று (2020 ஏப்ரல் 21) ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புத்தசாசன அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் அக்ரஹார காஷியப்ப தேரர் மற்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் உட்பட அதன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.