தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள்

கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் இன்னிசை நிகழ்ச்சி தொடரின் மேலும் ஒரு இசை நிகழ்ச்சி 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி மஹர, கடவத்தை பகுதி மையமாகக் கொண்டு இடம்பெற்றது.ි.

அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக பெயரிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் மக்களின் மன அழுத்தத்தைத் தவிர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடைமுறைகளுக்கு ஆதரவாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் கொழும்பு பகுதியில் மாடி கட்டடங்களில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக கடற்படை 2020 ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றது. அதன் படி, இந்த தொடர் நிகழ்வின் மற்றொரு நிகழ்வு, 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி மஹர, கடவத்தை பிரயிம் லேன்ட்ஸ் மாடி வீடு கட்டிடங்கள் மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

‘கந்துல’ தொடரின் நிறுவனர் சகோதரர் சார்ல்ஸ் தாமஸும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், இந் நிகழ்ச்சியின் போது, கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்கான சுகாதார நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.