தனியார் நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளால் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு பாதுகாப்பு மருத்துவ ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

ஒலுவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தும் மையத்தில் பணியாற்றும் கடற்படைப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மருத்துவ உடைகள், கஹதுடுவ Hydramani Pentex நிறுவனம் மற்றும் The Fight Against Corona Team’ அமைப்பு ஆகியவற்றால் 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமையகத்தில் வைத்து கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுற்கும், பாதிக்கப்பட்ட நபர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் கடற்படை பலவிதமான திட்டங்களை நடத்தி வருகிறது. கடற்படையின் இந்த திட்டங்களுக்கு பல்வேறு நிருவனங்கள் பொருள் உதவிகளுடன் ஆதரிக்கப்படுகின்றன. அதன் படி, கஹதுடுவ Hydramani Pentex நிறுவனம் மற்றும் The Fight Against Corona Team’ அமைப்பு ஆகியவற்றால் ஒலுவிலில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தல் மையத்தில் பணியாற்றும் கடற்படை வீரர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மருத்துவ ஆடைகளை தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமையகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

மேலும், இந்த நன்கொடைகள் கடற்படைக்கு வழங்கியது தொடர்பாக தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சேனரத் விஜேசூரிய கஹதுடுவ Hydramani Pentex நிறுவனம் மற்றும் The Fight Against Corona Team’ அமைப்பின் அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.