இத்தாலி நோக்கி பயணித்த MSC Magnifica என பயணிகள் கப்பலில் பணியாற்றிய அனுர பண்டார ஹேரத் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீடு திரும்பிச் சென்றனர்.

MSC Magnifica என பயணிகள் கப்பலில் பணியாற்றிய போது 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்ட அனுர பண்டார ஹேரத் அவர்கள் மற்றும் மேலும் இரண்டு நபர்கள் (02) புஸ்ஸ கடற்படை முகாமில் நிருவப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்து 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

சர்வதேச பயணிகள் கப்பலான MSC Magnifica கப்பலில் பணியாற்றிய அனுர பண்டார ஹேரத் அவர்கள் தன்னை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருமாறு சமூக ஊடகங்கள் மூலம் கோரியிருந்தார், அதன்படி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒப்புதலின் கீழ் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் இலங்கை துறைமுக அதிகார சபையின் உதவியுடன் 2020 ஏப்ரல் 06 ஆம் திகதி கடற்படை இவரை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கப்பலை வேறு நாட்டின் எந்தவொரு துறைமுகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாததால், தாய் நிறுவனம் அமைந்துள்ள இத்தாலி நோக்கி பயணம் செய்துள்ளது. கப்பல் இத்தாலிக்குச் செல்லும்போது எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடும் சந்தர்ப்பத்தில் கப்பலில் பயணித்த ஒரே இலங்கையரான அனுர பண்டார ஹெரத்தை இறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவரை பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல் மையத்திற்கு கடற்படையால் அனுப்பப்பட்டது.

இவ்வாரு தனிமைப்படுத்தப்பட்ட இவருடன் மேலும் இரண்டு இலங்கையர்களும் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறினார்கள். வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை உறுதிப்படுத்த பி.சி.ஆர் சோதனையால் அவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டதுடன் அதன் சான்றிதழ்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்கள் வெளியேறும் போது அனுர பண்டார ஹேரத், தன்னை இலங்கைக்குத் திரும்ப அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக இலங்கை கடற்படைக்கு தனது மிகுந்த நன்றியைத் தெரிவித்தார்.