தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்கள் 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி மூந்தலம களப்பு, உடப்புவ பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் பொது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குழு மூந்தலம களப்பு, உடப்புவ பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் பொது சந்தேகத்திற்குரிய ஒரு படகு சோதனை செய்யப்பட்டன. அங்கு தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள், குறித்த படகு மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 59 வயது வரையிலான கோந்தன்தீவு மற்றும் உடப்புவ பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் மீன்வள உதவிப் பணிப்பாளர் நிருவனத்தில் ஒப்படைக்கப்பட்டன.