Colombo International Container Terminals (CICT) நிறுவனம் மூலம் கடற்படைக்கு பாதுகாப்பு முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக Colombo International Container Terminals நிறுவனம் பல பாதுகாப்பு முகமூடிகள் இன்று (2020 ஏப்ரல் 22) கடற்படை கலங்கரை விளக்கம் உணவகத்தில் வைத்து கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதுடன் பூஸ்ஸ, ஒலுவில், சாம்பூர், முலங்காவில் மற்றும் கற்பிட்டி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களையும் நிறுவியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நிறுவனங்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி இன்று (2020 ஏப்ரல் 22,) Colombo International Container Terminals நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் ஹாங்கின் (Jack Hong) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கடற்படைக்கு பல பாதுகாப்பு முகமூடிகள் வழங்கப்பட்டன. கடற்படைத் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை சார்பாக இந்த முகமூடிகளை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் பங்கேற்ற CICT நிருவனத்தில் பிரதிநிதிகள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொண்ட செயல்முறையை பாராட்டினர்.

மேலும், இந்த நன்கொடைகள் கடற்படைக்கு வழங்கியது தொடர்பாக கடற்படைத் தலைமை பணியாளர் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.