இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வணிகக் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இறந்த நபரின் சடலத்தை கொண்டு வர கடற்படை உதவி

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட வணிகக் கப்பலான ‘MV GRACE’ கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, மாரடைப்பால் திடீரென இறந்த நபரின் சடலத்தை கப்பலில் இருந்து இறக்குவதற்கும், அதை கப்பல் நிறுவனத்தின் உள்ளூர் முகவரிடம் ஒப்படைப்பதற்கும் இன்று (2020 ஏப்ரல் 22). இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த கப்பலின் தலைமை சமையல்காரராக பணியாற்றிய டி.ஜே.சி குமாரசிங்க என்ற இலங்கையர். திடீரென மாரடைப்பால் இறந்ததால், Marine International Agencies (pvt) Ltd என்ற கப்பலின் உள்ளூர் முகவர் இறந்த உடலை இறக்குவதற்கு உதவி கோரியிருந்தார். அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன், கடற்படையின் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ள வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு, கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த கப்பலில் இருந்து உடலை பாதுகாப்பாக இறக்கி துறைமுக வளாகத்தில் கிருமி நீக்கம் செய்து சரியான சுகாதார முறைகளைப் பின்பற்றி, சடலத்தை கப்பலின் உள்ளூர் முகவர் Marine International Agencies (pvt) Ltd நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.