93 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன

2020 ஏப்ரல் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலகேனி, கடெய்காடு தெற்கு கரைக்கு கடலில் இருந்து தரையிறக்க முயன்ற 93 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சாவுடன் இரண்டு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலகேனி, கடெய்காடு தெற்கு கடல்கரையில் சோதனைச் சாவடியில் பணியாற்றுகின்ற வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வெத்தலகேணி உப முகாமில் ரேடார் நிலையத்தில் பணியாற்றிய கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான படகொன்று கண்கானித்தனர். அதன் பின் அவர்கள் கரைக்கு வந்த குறித்த படகை சோதனை செய்து 44 பொட்டலங்களில் இருந்த 93 கிலோகிராம் கஞ்சாவைக் கண்டுபிடித்தனர்.

குறித்த கஞ்சா பொதியுடன் படகிலிருந்த இரண்டு (02) சந்தேக நபர்கள் மீன்பிடிப் படகு மற்றும் பல மீன்பிடி உபகரனங்கள் கடற்படை காவலுக்கு எடுக்கபட்டதுடன் குறித்த சந்தேகநபர்கள் தலையாடி பகுதியில் வசிக்கின்ற 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என கண்டறியப்பட்டது. இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கஞ்சா மற்றும் மீன்பிடி படகு மேலதிக விசாரணைகளுக்காக சங்கானே கலால் துறைக்கு ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும், நாட்டின் நிலைமையைப் பொறுத்து குறித்த படகு, அங்கிருந்த கஞ்சா மற்றும் சந்தேக நபர்களை வடக்கு கடற்படை கட்டளையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிப்பு பிரிவு மூலம் சுகாதார வழிகாட்டுதல்களின்படி முழுமையாக கிருமி நீக்கம் செய்த பின்னர் கடற்படையினரால் ஆய்வு செய்யப்பட்டது.