49 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உள்ளூர் கஞ்சாவுடன் இருவர் (02) கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 ஏப்ரல் 23 அன்று தனமல்வில உஸ்ஸல்ல மற்றும் குடாவெவ பகுதிகளில் ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர், அப்போது 49 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உள்ளூர் கஞ்சா கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய பணியில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. அதன் படி 2020 ஏப்ரல் 23 அன்று கடற்படை அம்பலண்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மற்றொரு நடவடிக்கை தனமல்வில பகுதியில் மேற்கொண்டுள்ளது. அங்கு உஸ்ஸல்ல பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை கண்காணித்து சோதனை செய்த போது, ஏழு கிலோ கிராமுக்கு அதிகமான உள்ளூர் கஞ்சாவை மீட்டெடுக்க முடிந்தது. அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, குடாவேவா பகுதியில் 42 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குடா ஓய பகுதியில் வசிக்கின்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கோஸ்லந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.