அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கடற்படையால் முகமூடிகள் வழங்கப்பட்டன

அனுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களின் பயன்பாட்டிற்காக பல பாதுகாப்பு முகமூடிகள் 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி, கடற்படையால் வைத்தியசாலையில் மருத்துவ ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.

நாட்டில் நிலவும் சூழ்நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் அதிக ஆபத்துள்ள சூழலில் தங்களுடைய கடமைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது, மேலும் மருத்துவமனை வார்டு வளாகங்களை சரிசெய்தல் மற்றும் நோயாளிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் போன்ற திட்டங்களை கடற்படை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனை ஊழியர்களுக்குத் தேவையான மருத்துவ ஆடைகளை கடற்படை பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன் வழங்கி வருகிறது.,

அதன்படி, ANIM-8, Supem De Silva மற்றும் Adventure SEAL ஆகிய நிருவனங்களால் கடற்படைக்கு நன்கொடையாகக் வழங்கப்பட்ட இந்த கழுவக்கூடிய பாதுகாப்பு முகமூடிகள் (Face visor) கடற்படைத் தளபதியின் உத்தரவின் பேரில் 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டன.

இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிருவனத்தின் தளபதி அவர்களால் இந்த முகமூடிகளை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக வைத்தியசாலையின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.