மான் இறைச்சி கொண்ட ஒரு நபர் (01) கைது செய்ய கடற்டை உதவி

கடற்படை மற்றும் மன்னார் ஊழல் தடுப்புப் பிரிவு இனைந்து 2020 ஏப்ரல் 24 ஆம் திகதி துனுக்காய், இலுப்பைகட்டவாய் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மான் இறைச்சி கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் கடற்படை மேற்கொண்ட நடவடிக்கைகளின் மற்றொரு நடவடிக்கை துனுக்காய், இலுப்பைகட்டவாய் பகுதி மையமாக கொண்டு மேற்கொள்ளபட்டதுடன் அங்கு 35 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் இலுப்பைகட்டவாய் பகுதியில் வசிக்கும் 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் மான் இறைச்சி குறித்து மேலதிக விசாரணைகள் மன்னார் ஊழல் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது, மேலும் நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பு அழகுபடுத்தும் இந்த வகையான அப்பாவி விலங்குகளை படுகொலை செய்வதில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்ய மற்றும் இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.