தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் 2020 ஏப்ரல் 25 ஆம் திகதி முலங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான அம்புப்புரம், முலங்காவில் பகுதியில் உள்ள கடற்கரை கண்காணிப்புச் சாவடியில் பணியாற்றும் கடற்படையினர் குழுவினரால் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் 500 மீட்டர் நீளமுள்ள தடைசெய்யப்பட்ட வலையுடன் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 22 முதல் 28 வயதிற்குட்பட்ட அதே பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்ட இந்த நபர்கள் மற்றும் வலை தொடர்பான மேலதிக விசாரணைகள் முலங்காவில் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.