வெடிக்காத 155 மிமி பீரங்கி ரவையொன்று கடற்படை மீட்டுள்ளது

மன்னார் நச்சிகுடா கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் இருந்து வெடிக்காத 155 மிமி பீரங்கி ரவையொன்று (01) 2020 மே 01 ஆம் திகதி கடற்படையால் மீட்கப்பட்டது.

கடலோர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வட மத்திய கடற்படை கட்டளயின் கடற்படையினர் 2020 மே 01 ஆம் திகதி நச்சிகுடா கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் சந்தேகத்திற்கிடமான ஒரு பொருளைக் கண்கானித்தனர், பின்னர் கட்டளையுடன் இணைக்கப்பட்ட சுழியோடி மாலுமிகளின் உதவியுடன் அதை மேலும் சோதனை செய்த போது ஒரு வெடிக்காத 155 மிமி பீரங்கி ரவையொன்று கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பீரங்கி ரவை மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக பீரங்கி ரவை முலங்காவில் காவல் நிலையம் மூலம் கிலிநொச்சி சிறப்பு பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.