உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் (01) கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 மே 05 ஆம் திகதி தனமல்வில நகர பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியொன்று மூலம் உள்ளூர் கஞ்சா கொண்டு சென்ற ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

நாட்டில் பேரழிவு நிலைமை நிலவிய போதிலும், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, கடற்படை வீரர்கள் அம்பலாந்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து தனமல்வில பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று ஆய்வு செய்தனர். அப்போது முச்சக்கர வண்டியில் பயணித்த நபரிடமிருந்து 675 கிராம் உள்ளூர் கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர், உள்ளூர் கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டி கைது செய்யப்பட்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எம்பிலிபிடிய பகுதியில் வசிக்கின்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் மேலும் சந்தேக நபர், உள்ளூர் கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டி மேலதிக விசாரணைகளுக்காக தனமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.