தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

2020 மே 06 ஆம் திகதி மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது கொடுவமட பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 02 தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் மீன்வளம் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கைகளின் விரிவாக்கமாக, 2020 மே 06 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மட்டக்களப்பு களப்பு கொடுவமட பகுதியில் மேற்கொன்டுள்ள ஒரு நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற 100 அடி மற்றும் 50 அடி நீளமுள்ள இந்த 02 அங்கீகரிக்கப்படாத வலைகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.