Morison PLC நிறுவனம் மூலம் கடற்படைக்கு பல வகையான மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான மருந்துகள் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஆஃப் த ஃப்ளீட் வசந்த கரண்னாகொடவின் வேண்டுகோளின் பேரில் 2020 மே 06 ஆம் திகதி Morison PLC நிறுவனம் மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்டன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன. அதன் படி முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஆஃப் த ஃப்ளீட் வசந்த கரண்னாகொடவின் வேண்டுகோளின் பேரில் Morison PLC நிறுவனம் மூலம் 100000 க்கும் மேற்பட்ட வைட்டமின் சி மாத்திரைகள் 2020 மே 06 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவிடம் ஒப்படைக்கபட்டன.

மேலும், இதேபோன்ற சுமார் 50000 வைட்டமின் ‘சி’ மாத்திரைகள் முந்தைய சந்தர்ப்பத்தில், கடற்படை பொது மருத்துவமனையில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக Morison PLC நிருவனம் நன்கொடையாக வழங்கியதுடன் இந்த மருந்துகளை வழங்கியதற்காக கடற்படைத் தளபதி Morison PLC நிறுவனத்திற்கு கடற்படை சார்பாக தனது நன்றியை தெரிவித்தார்.