‘தெல்வு பஹன்’ சமூக நல அமைப்பு மூலம் கடற்படைக்கு சுகாதார ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகள் (PPE) ‘தெல்வு பஹன்’ சமூக நல அமைப்பு மூலம் 2020 மே 06 ஆம் திகதி கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தங்களுடைய கடமைகளை விடாமுயற்சியுடன் மேற்கொள்கின்ற சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகளை (பிபிஇ) வழங்கும் நோக்கில் ‘தெல்வு பஹன்’ சமூக நல அமைப்பு மூலம் தொடங்கிய ‘தெல்வு பஹன் சுவ ஹரசர’ எனத் திட்டத்தின் கீழ் இந்த தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகள் (PPE) கடற்படைக்கு வழங்கப்பட்டன. ரூ .200,000 மதிப்புள்ள நூறு தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகள் இவ்வாரு 2020 மே 6 ஆம் திகதி கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவிடம் இந்த பொருட்கள் ஒப்படைக்க ‘தெல்வு பஹன்’ சமூக நல அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் டாக்டர் லக்மல் குலசேகர மற்றும் டாக்டர் மதுபானி திசாநாயக்க கழந்து கொண்டனர்.

‘தெல்வு பஹன்’ அமைப்பின் இந்த தகுதியான பங்களிப்பை கடற்படைத் தளபதி பாராட்டினார், மேலும் அவர்களுக்காக கடற்படையின் நன்றியையும் தெரிவித்தார்.