நீர்மூழ்கி உபகரணங்களுடன் இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

2020 மே 06 ஆம் திகதி வலைப்பாடு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆழமற்ற நீரில் கட்டப்பட்ட ஒரு தற்காலிக குடிசையில்,அனுமதி பத்திரங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி உபகரணங்களுடன் இரண்டு நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் மீன்வளம் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கைகளின் விரிவாக்கமாக, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 மே 06 அன்று வலைப்பாடு கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் பொது ஆழமற்ற கடலில் கட்டப்பட்ட ஒரு சந்தேகத்திற்கிடமான தற்காலிக குடிசை சோதனை செய்யப்பட்டதுடன் அங்கிருந்து, 15 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 03 ரெகியுலேட்டர்கள் , ஒரு ஜோடி நீர்முழ்கி காதணிகள் (01), ஒரு வாள் (01) மற்றும் சில நீர்முழ்கி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, குடிசையில் இருந்த இரண்டு (02) நபர்களும் அவர்களது நீர்முழ்கி உபகரணங்களும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 43 வயதுடைய வலைப்பாடு பகுதியில் குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர், மேலும் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள், வாள் மற்றும் நீர்முழ்கி உபகரணங்கள் ஜேபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.