வெலிசர கடற்படை தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 08 கடற்படை வீரர்கள் பூரண குணம்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 07 நபர்கள் கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையிலும் ஒரு நபர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் இவர்களின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி 2020 மே 06 ஆம் திகதி அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

மேலும், வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.