தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

கடற்படையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் சாம்பூர் (98) ஒலுவில் (20) தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 118 நபர்கள் இன்று 2020 மே 08 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

சாம்பூர் கடற்படை மரைன் படையின் தலைமையக வளாகத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறிய 98 நபர்கள், கொழும்பு குணசிங்கபுர, வேல்ல வீதி, கிராண்ட் பாஸ் மற்றும் நாகலகம் தெரு ஆகிய பகுதிகளிலும் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறிய 20 நபர்கள், ஜா ஏல பகுதியிலும் வசிக்கின்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட இவர்கள் அனைவரும் ஏப்ரல் 11 மற்றும் 16 ஆம் திகதிகளில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த இவர்கள் இன்று (2020 மே 08) தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும், போதைக்கு அடிமையானவர்களைத் தனிமைப்படுத்தும் போது, அவர்கள் மீது அதிக கவனம் செலுத்திய கடற்படையினர் அவர்களை தனிமைப்படுத்த மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்கவும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் படி சாம்புர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையான 07 நபர்கள் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும் நிட்டம்புவை உறாபொல பகுதியில் உள்ள சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர், அப்போது மேற்கொண்டுள்ள சோதனைகளின் போது அவர்களின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை பூர்த்தி செய்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்த வழங்குகின்ற தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழை கடற்படையால் வழங்கப்பட்டது.

அதன்படி, சாம்பூர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்ட அனைத்து நபர்களும் தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறிவிட்டனர். மேலும், இன்று (2020 மே 08,) ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வெளியேறியவர்கள் உட்பட 49 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 19 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாம்பூர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறிய நபர்கள்

ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறிய நபர்கள்