வெசாக் தினத்தை (07) முன்னிட்டு கடற்படை முகாம்களில் விசேட பௌத்த மத வழிப்பாட்டு பிரார்த்தனைகள் இடம்பெற்றன

புத்தரின் மகத்தான வாழ்கையை நினைவு கூரும் வெசாக் தினத்தை (07) முன்னிட்டு கடற்படை முகாம்களில் விசேட பௌத்த மத வழிப்பாட்டு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. மேலும் உலகம் முழுவதும் பரவி வரும் கோவிட் -19 வைரஸ் தொற்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்கள் உட்பட அனைத்து இலங்கையர்கள் மற்றும் முழு உலக மக்களுக்கும் விரைவாக குணமடைய இங்கு மத பிராத்தனைகளும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.

அதன்படி, 2564 வது சம்புத ஜெயந்தி கருத்தில் கொண்டு கடற்படை உறுப்பினர்கள் வெசாக் விளக்குகளை ஒளிரச் செய்தல் உள்ளிட்ட மத அனுசரிப்புகளில் ஈடுபட்டனர். கோவிட் -19 வைரஸ் தொற்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்கள் உட்பட முழு உலக மக்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கி விளக்குகள் ஒளிரச் செய்யும் திட்டமொன்றும் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றி அனைத்து கடற்படை முகாம்களிலும் நடத்தப்பட்டன.


வடக்கு கடற்படை கட்டளை


மேற்கு கடற்படை கட்டளை


கிழக்கு கடற்படை கட்டளை


தெற்கு கடற்படை கட்டளை


வட மத்திய கடற்படை கட்டளை


தென்கிழக்கு கடற்படை கட்டளை


வடமேற்கு கடற்படை கட்டளை