பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 14 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 14 நபர்கள் 2020 மே 08 மற்றும் 09 திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்த இந்த சர்வதேச கப்பல்கள் மற்றும் துறைமுக பாதுகாப்புப் பணியாளர்கள் அனைவரும் மையத்தை விட்டு அனுப்புவதற்கு முன் பீ.சீ.ஆர் ஆய்வுக்கு உட்படுத்தி கோவிட் -19 வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து புறப்பட்ட குழுவினருக்கு தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழை இலங்கை கடற்படையால் வழங்கப்பட்டது.

தற்போது வரை, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முடித்த 129 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறிவிட்டனர். மேலும் 55 இலங்கையர்கள் இந்த மையத்தில் தனிமைப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.