ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளினால் கடற்படைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுடு நீர் போத்தல்கள் 10 வது கேடட் ஆட்சேர்ப்பின் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளினால் இன்று (2020 மே 09) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

நாட்டில் COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக கடற்படை பல்வேறு முகவர் மற்றும் அமைப்புகளிடமிருந்து பல்வேறு வகையான பொருள் உதவிகளைப் பெறுகிறது. இந்தப் பின்னணியில் 10 வது கேடட் ஆட்சேர்ப்பின் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளினால் கடற்படைக்கு தேவையான பல சுடு நீர் போத்தல்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவிடம் இன்று கடற்படை தலைமையகத்தில் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில் ரியர் அட்மிரல் (ஓய்வு) டபிள்யூ.எம்.பி.எல் வீரசிங்க மற்றும் கொமான்டர் (ஓய்வு) ஏ.எஸ். டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், வழங்கப்பட்ட இந்த நன்கொடைகளுக்கு கடற்படைத் தளபதி ஓய்வுபெற்ற மூத்த கடற்படை அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.