கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக ராகம பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கடற்படைக்கு முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல முகமூடிகள் ராகம பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து இன்று (2020 மே 09) கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.p>

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது கடற்படை நீட்டித்த பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதைக் கருத்தில் கொண்டு, ராகம பேதுரு பாவுலு தேவாயதிற்கு சொந்தமான தேவத்த சாலையில் உள்ள கத்தோலிக்க இறப்பு நன்கொடை மற்றும் நலச் சங்கத்தின் பிரிவு 02 மற்றும் 03 இன் சகோதர்களினால் இந்த முகமூடிகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு நாடாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய பின்னணியில், இவ்வாரான நலச் சங்கங்களின் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டும். மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் கடற்படைக்கு வழங்கப்பட்ட இந்த நன்கொடைகளுக்கு தங்களுடைய நன்றியைத் தெரிவித்தனர்