150 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 150 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 மதிப்புள்ள வட்டி இல்லாத கடன் வசதியின் காசோலைகளை வழங்கும் நிகழ்வு குறித்த சிரேஷ்ட கடற்படை வீரர்கள் பணியாற்றும் நிருவனங்கள் மற்றும் கப்பல்கள் மையமாக கொண்டு இடம்பெற்றன. மேலும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் விடுப்பில் இருக்கும் சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று இந்த காசோலைகள் ஒப்படைக்கப்பட்டன. 2020 மே 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொள்ளும் போது கடற்படைத் தலைமையகத்தில் இந்த காசோலைகளை வழங்குவது கடினம் என்பதால், கடற்படைத் தளங்களில் மற்றும் கப்பல்களில் காசோலைகளை ஒப்படைக்கவும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் விடுப்பில் இருக்கும் சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று காசோலைகளை ஒப்படைக்கவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன் படி 2020 மே 11 முதல் 14 வரை 04 நாட்களுக்கு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் போது, கடற்படை நன்மை நிதியத்தால் வெளியிடப்பட்ட 75 மில்லியன் ரூபா பணம் 150 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு கடன் வசதியாக வழங்கப்பட்டது.

கடற்படையில் நீண்ட காலமாக பணியாற்றிய சிரேஷ்ட கடற்படை வீரர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கிழ் மொத்தம் 3130 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் மேலும் 2038 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு இந்த கடனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.