வெற்றிகரமான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 67 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

கடற்படை வீரர்களின் 16 குடும்பங்களைச் சேர்ந்த 67 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை முடித்து 2020 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து வெளியேறினர்.

அதன்படி, 2020 மே 15 ஆம் திகதி ஹபராதூவ பொலிஸ் கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 04 குடும்பங்களைச் சேர்ந்த 18 நபர்கள் மற்றும் அனுராதபுரத்தில் நிறுவப்பட்ட கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் தனிமைபடுத்தப்பட்ட 07 குடும்பங்களைச் சேர்ந்த 31 நபர்களும் இன்று (2020 மே 16) கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட 05 குடும்பங்களைச் சேர்ந்த 18 நபர்களும் உட்பட கடற்படை வீரர்களின் 16 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 67 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு கடற்படையால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் படி, இப்போதைக்கு கடற்படை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலோர் தங்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்து கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறிவிட்டனர், மேலும் அவர்கள் தங்களுடைய வீடுகளில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள்