கடற்படை உறுப்பினர்களுக்கு ஓய்வெடுக்க தாய் இலங்கை புத்த கலாச்சார மையத்தின் இருப்பிட வசதிகள் வழங்கப்பட்டது

வணக்கத்திற்குரிய ராஸ்ஸகல சீவலி தேரரால் பராமரிக்கப்படுகின்ற தாய் இலங்கை புத்த கலாச்சார மையத்தின் இருப்பிட வசதிகள் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளுக்காக கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படையினர் மீன்டும் பணிகளைத் தொடங்குவதுக்கு முன்பு மேலும் ஓய்வு படுத்த கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வேண்டுகோளின் பேரில் வணக்கத்திற்குரிய ராஸ்ஸகல சீவலி தேரருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட ஹெயியன்துடுவ, மாபிம பகுதியில் உள்ள இந்த தாய் இலங்கை புத்த கலாச்சார மையத்தின் இருப்பிட வசதிகள் 2020 மே 01 ஆம் திகதி முதல் கடற்படையிடம் வழங்கப்பட்டதுடன் தற்போது 72 கடற்படை வீரர்கள் அங்கு ஓய்வெடுக்கின்றனர்.

நாட்டின் நிலைமையைப் பொறுத்து கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வணக்கத்திற்குரிய ராஸ்ஸகல சீவலி தேரரால் வழங்கப்பட்ட இந்த ஆதரவை கடற்படை பெரிதும் பாராட்டுகிறது.