கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மேற்கொண்டுள்ள இரண்டு கூட்டு நடவடிக்கைகளின் போது கேரள கஞ்சா கொண்ட நான்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 மே 15 ஆம் திகதி பெலியத்த மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த இரண்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது கேரள கஞ்சா கொண்ட மூன்று (03) நபர்களையும் உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு பெண்ணையும் கைது செய்தனர்.

நாட்டில் பேரழிவு நிலைமை நிலவிய போதிலும், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் தங்காலை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து பெலியத்த பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 900 கிராம் கேரள கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடற்படையினர் அம்பலந்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து தனமல்வில, கஹகுருல்லன்பெலெஸ்ஸ பகுதியில் மேற்கொண்டுள்ள மற்றொரு நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 2 கிலோ மற்றும் 500 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு பெண்ணை கைது செய்தனர். மேலும் அங்கு இருந்து மின்சார தராசுத் தட்டொன்றும் கஞ்சாவை விற்று சம்பாதித்த சுமார் ரூ. 600,000 பணமும் கைது செய்யப்பட்டன.

பெலியத்த பகுதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 39 வயதுக்குட்பட்ட மோதரவான மற்றும் பல்லத்தர பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தனமல்வில பகுதியில் கைது செய்யப்பட்ட 30 வயதான பெண் அதே பகுதியில் வசிப்பவர் என கண்டறியப்பட்டுள்ளது. பெலியத்த மற்றும் தனமல்வில பொலிஸார் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கஞ்சா மற்றும் பிற பொருட்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.